Sunday, March 14, 2010

தலைகவசத்தின் அருமை

கடந்த சில மாதங்களுக்கு முன் என் அலுவலக நண்பருக்கு நடந்த சம்பவமிது.

ஓரு ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடனிருந்த அவரை அவரது சகோதரி அழைத்து தன்னை வீட்டில் விடுமாறு கூறினார். பேருந்து நிலையத்திலிருந்து அவரை வீட்டில் விட்டுவிட்டு நண்பர்களிடத்து திரும்பும் வழியில் ரோட்டில் நடந்து கொண்டிருந்த ஒரு பெண்மணி திடீரென ரோட்டை கடக்க முயன்றார். அவர் மீது மோதாமல் இருக்க நண்பர் தனது வண்டியை ரோட்டிலிருந்து கீழே இறக்க முயல வண்டி அவரது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
மூக்கிலிருந்து வழிந்த ரத்தத்தில் பயந்துபோன அக்கம்பக்கத்துகாரர்களும் நண்பர்களும் அவசர சிகிச்சை செய்து நகரத்திலுள்ள பிரபல மருத்துவமனையில் அவசர சிகிச்சையில் அனுமதித்தனர்.

கண்களுக்கு கீழ் உள்ள எலும்புகள் நொறுங்கி செயற்கை எலும்புகளை பொருத்தியிருக்கிறார்கள். கை,கால்களில் கணிசமான காயங்களும் அடக்கம்.
தலையை பிளந்து தைத்திருந்தார்கள். கண்பார்வையும் கணிசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

சுமார் மூன்று வாரங்களுக்கு மேலான சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வெளிவரும்போது சுமார் 2 லட்சங்களும், தீராத தலைவலியுடனும் நிறைய மனவலியுடனும் இருந்தார் நண்பர்.

கடந்த மாதம் அவரின் வீட்டில் சென்று பார்த்தபோது கொஞ்சம் தேறியிருந்தார்.
கணிணி தொடர்பான வேலை என்பதால் இன்னும் சில வாரங்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியிருக்கிறார்கள்...

விபத்திற்கான முக்கிய காரணமாக நான் கருதுவது தலைக்கவசம் (ஹெல்மெட்) அணியாதது.

அவ்வப்போது போக்குவரத்து போலீசுக்கு பயந்து தரமற்ற தலைக்கவசம் அணிந்தும், அதை வண்டியின் பின்பக்கத்திலும், கண்ணாடியிலும், முன்பக்கத்தில் வைத்தும் சட்டத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் மக்களே... கவனம்..

தலைக்கவசத்தின் அருமை குறித்து ஊடகங்களும், பொது நிறுவனங்களும், விளம்பர நிறுவனங்களும் ஆயிரம் முறை கூறினாலும்...