Showing posts with label புதுக்கவிதை. Show all posts
Showing posts with label புதுக்கவிதை. Show all posts

Friday, December 25, 2009

நூல் அறிமுகம்


கடந்த 20ம் தேதி நடவு வெளியீட்டின் 7வது வெளியீடாக வெளிவந்துள்ள நண்பர் நிலா கிருஷ்ணமூர்த்தியின் ‘கழிந்த நிமிஷங்களின் மௌனங்கள்’ கவிதை தொகுப்பு வெளியீடு கோவையில் நடந்தது.
நூலிலிருந்து சில கவிதைகள்

*

அப்பாவின் தோளிலோ
அம்மாவின் இடுப்பிலோ
பாட்டியின் கக்கத்திலோ
அமர்ந்து
பேருந்தில் ஏறும்
குழந்தைகளின் அழகை
ரசிக்க எண்ணாமல்
வயதை கணக்கிடுவதில்
முந்திக் கொள்கிறது
நடத்துனர் மனசு

கூட்டிப் பெருக்கிப்போட்ட
சில நொடிகளில்
உதிர்த்திடும் தன் பூக்களை

இலைகளை கீரையாய்
பூக்களை பொறியல்களாய்
காய்களை குழம்பு வைத்து
சுவைக்கும் நாக்குகள்

பருவம் தப்பிய வருஷத்தில்
இலைகள் மட்டுத் தாங்கி நிற்கும்
மலடாய் சில மாதம்

மனசின் உதாசீனமாய்
துண்டிக்கப்படும்
மரத்தின் கிளைகள்

அடுத்த துளிர்ப்பிக்காய்
சொரியும் ஈர ரத்தத்தில்
தொடங்கும் வாழ்வு